Bullet train project will help the country development

நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் - மகாராஷ்ட்ரா மட்டுமல்ல நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும் என்று கூறினார்.

இந்தியாவில் விரைவாக புல்லட் ரயில் கொண்டு வர உதவிய ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிற்கு நன்றி கூறினார். நகரங்கள் இடையேஅதி விரைவு போக்குவரத்துக்கு புல்லட் ரயில் உதவும் என்றும், மும்பை - அகமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாடுகளுடன் வளர்ச்சியில் போட்டியிட புல்லட் ரயில் பெரிதும் உதவும் என்றும் ஏழைகளுக்கும் நவீன போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த புல்லட் ரயில் திட்டம் உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.