Asianet News TamilAsianet News Tamil

குஜராத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் புகுந்த மாடு; பாஜகவின் சதி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு!!

குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசிக் கொண்டிருக்கும்போது மாடு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பாஜகவின் சதி என்று அசோக் கெலாட் கூறினார்.
 

Bull enters Gujarat election rally; Rajasthan CM Ashok Gehlot says it BJP's Conspiracy
Author
First Published Nov 29, 2022, 2:58 PM IST

குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி இரண்டாம் கட்டமாக  93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. மாநிலத்தில் மும்முனை தேர்தல் நடக்கிறது. கடந்த காலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவின. இந்த முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய முக்கிய மூன்று பிரதான கட்சிகள் களம் காண்கின்றன. 

கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த முறை, 2017ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் பாஜக 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன. இந்த முறை காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தேர்தலில் ஆம் ஆத்மி வெறும் ஒரு சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.

Bharat Jodo Yatra in Madhya Pradesh : நடைபயணத்தால் எனக்குள் மாற்றம் வந்திருக்கிறது: ராகுல் காந்தி வெளிப்படை

பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என்று பெரிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலும் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே முதல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திங்கள் கிழமை மேசனா என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒரு மாடு கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. அப்போது, பேசிக் கொண்டிருந்த அசோக் கெலாட், ''நானும் எனது சிறு வயதில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் பாஜக இதுபோன்று மாடு அல்லது பசுக்களை ஏவி விடுகிறது. கூட்டத்திற்கு இடஞ்சல் கொடுக்க வேண்டும் என்றே பாஜக இதை செய்துள்ளது. தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற தந்திரங்களை பாஜக பின்பற்றி வந்துள்ளது'' என்றார்.

Gujarat Election 2022:சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை கேள்வி எழுப்பிய காங்கிரஸின் வாக்குவங்கி தீவிரவாதம்: மோடி பேச்சு!!

கூட்டத்திற்குள் மாடு புகுந்தவுடன், மக்கள் இங்கும் அங்கும் ஓடினர். சலசலப்பு ஏற்பட்டது. உடனே மக்களை அமைதியாக இருக்குமாறு கெலாட் கேட்டுக் கொண்டார். அமைதியாக இருங்கள், மாடு தானாக சென்றுவிடும் என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios