மும்பையில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மார்க் தாமோதர் பார்க் பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது.  மிகவும் பழமையான இந்த கட்டிடத்தில் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கட்டிடத்தின் தரை தளத்தில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சீரமைப்பு பணி நடந்து வந்தது.இதன் காரணமாக அங்கு மருத்துவ பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மருத்துவமனை காலியாக இருந்தது.

இந்த நிலையில், யாரும் நேற்று காலை அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிடத்தின் மாடிகள் மளமளவென சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததில் வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

கட்டிட விபத்து பற்றி தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் 14 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களும் மீட்பு பணியில் அவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.