Asianet News TamilAsianet News Tamil

சுலப முறை வசூலுக்கு மாறுது பிஎஸ்என்எல்

bsnl bill-payment
Author
First Published Dec 11, 2016, 11:00 AM IST


பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள், லேண்ட் லைன் இணைப்பு பெற்றவர்கள், பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்கள் அடுத்த மாதம் முதல் மாதாந்திர கட்டணம் செலுத்த பி.எஸ்.என்.எல். அலுவலகம் செல்லவேண்டியது இல்லை. 

மாந்திரக் கட்டணத்தை தனியார் இ-பேமெண்ட்கள் மூலமே செலுத்திக்கொள்ளும் திட்டத்தை  பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக பே-டிஎம், மொபிக்விக் ஆகிய இரு தனியார் நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எஸ். பேச்சு நடத்தி வருகிறது.  இந்த வசதி இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதிஇயக்குநர் சுஜாதா ராய் கூறுகையில், “ தனியார் இ-பேமெண்ட் நிறுவனங்களான பே-டிஎம், மொபிக்விக், இன்டிபே ஆகிய நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். சமூகமாக உடன்பாடு ஏற்படும் பட்சத்தில், இந்த மாத இறுதியில் இருந்து இந்ததனியார் நிறுவனங்களின் தளத்தில் இருந்தவாரே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்திர கட்டணத்தை செலுத்த முடியும்” என்றார். 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் 9.37 கோடி மொபைல் வாடிக்கையாளர்களும், 1.38 கோடி லேன்ட் லைன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். நாட்டின் 4-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் பி.எஸ்.என்.எல். என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios