விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் துடைப்பம் கொண்டு தனக்குத்தானே அடித்துக் கொண்டனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 41 நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவைக் குறித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு திரும்பிய அவர்கள், கடந்த 5 நாட்களாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கொட்டும் மழையிலும், போராட்டம் நடத்தினர். தங்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டும் அவர்கள் நடத்தினார். 

நேற்று நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் தங்களை காலணியால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து தனக்குத்தானே விவசாயிகள் துடைப்பம் கொண்டு அடித்து கொள்ளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.