அடுத்தடுத்து நொறுங்கி விழும் பீகார் பாலங்கள்! 10 நாட்களுக்குள் 6வது சம்பவம்!
மூன்று முதல் நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் முற்றிலும் இடிந்து விழுந்தால் சுமார் 60,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றொரு பாலம் பழுதடைந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆறு பாலங்கள் வாகனப் போக்குவரத்துக்கு லாயக்கு இல்லாத நிலையை அடைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தாக்கூர்கஞ்ச் பிளாக்கில் உள்ள பாலம் திடீரென ஒரு அடி மண்ணில் புதைந்தது. அங்கு பெய்த கனமழையை தொடர்ந்து பண்ட் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாலத்தின் மேற்பரப்பில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத அளவுக்கு அபாயகரமான நிலையில் உள்ளது.
பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பாலம், 2007-2008 ஆம் ஆண்டு அப்போதைய எம்.பி.யான தாகுர்கஞ்ச் எம்.பி எம்.டி தஸ்லீமுதீனின் எம்.பி நிதியில் கட்டப்பட்டது. மூன்று முதல் நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் முற்றிலும் இடிந்து விழுந்தால் சுமார் 60,000 மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
டாஸ்மாக் மது விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும்: அண்ணாமலையின் ஐடியா எப்படி இருக்கு?
சனிக்கிழமை மதுபானி பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் ரூ. 3 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலத்தின் பணிகள் 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. அதற்கு முன், அராரியா, சிவான், கிழக்கு சம்பாரண் மற்றும் கிஷன்கஞ்ச் ஆகிய இடங்களில் பாலம் இடிந்து விழுந்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பாலம் நொறுங்கி விழுந்தது. ஜூன் 23 அன்று, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பாலம் இடிந்தது. ஜூன் 22ஆம் தேதி கந்தக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் விழுந்துவிட்டது. ஜூன் 19ஆம் தேதி அராரியா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பீகாரில் பாலங்கள் அடிக்கடி இடிந்து விழும் சம்பவங்கள் நடந்துவருவது ஏன் என மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
"15 அல்லது 30 நாட்களுக்கு முன் ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாலங்கள் ஏன் இடிந்து விழுகின்றன? மாநில அரசு மீது பழி சுமத்துவதற்காக சதி நடக்கிறதா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
படிச்சது 10வது தான்... டம்மி ஐ.டி. கம்பெனியை தொடங்கி லட்ச லட்சமாக அபேஸ் செய்த ஆசாமிகள்!