Asianet News TamilAsianet News Tamil

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது! ஒரே வாரத்தில் 2வது சம்பவம்! பீதியில் பொதுமக்கள்!!

மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள படேதி பஜாரின் சந்தையையும் தர்பங்காவில் உள்ள ராம்கர் பஞ்சாயத்துடன் இணைக்கும் பாலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்றுவர பயன்படும் முக்கிய இணைப்பாக இருந்தது.

Bridge Collapse In Siwan Creates Panic; 2nd Incident In Bihar This Week sgb
Author
First Published Jun 23, 2024, 6:13 PM IST

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் ஒரு பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

கந்தக் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சரிந்தபோது ஏற்பட்ட பெரும் சத்தம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ராம்கர் வரை கேட்டது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலம் இடிந்து விழும் தருணத்தின் வீடியோஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள படேதி பஜாரின் சந்தையையும் தர்பங்காவில் உள்ள ராம்கர் பஞ்சாயத்துடன் இணைக்கும் பாலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்றுவர பயன்படும் முக்கிய இணைப்பாக இருந்தது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட இந்தப் பாலம் மிகவும் பழமையானதாகவும், முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் இடிந்து விழுந்தமு என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தரமற்ற கட்டுமானத்தின் காரணமாக பாலத்தின் தூண்களைச் சுற்றி அரிப்புக்கு ஏற்பட்டு ஒரு தூண் இடிந்து விழுந்ததிருக்கிறது என அவர்கள் கூறுகின்றனர். இதனால், கால்வாயைக் கடந்து மறுபுறம் செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

பீகாரின் அராரியாவில் பக்ரா ஆற்றின் மீது கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் சில நொடிகளில் நொறுங்கி விழுந்த இதேபோன்ற சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. 12 கோடியில் கட்டப்பட்ட இப்பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios