தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் மணமகனுக்கு வழுக்கைத் தலை என்பதை அறிந்து கொதித்தெழுந்த மணமகள் உடனடியாக மண மேடையில்  இருந்து கீழே இறங்கி திருமணத்தை நிறுத்தினார்.

டெல்லியைச் சேர்ந்த ரவிக்குமார் டாக்டராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் ஸ்ரேயா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு  முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், ஃபோட்டோவை பறிமாறிக் கொண்டனர்.

அந்த ஃபோட்டோவில் ரவிக்குமார்அழகான சிகை அலங்காரத்துடன் ஸ்மார்ட்டாக இருந்தார். இதனால் ஸ்ரேயாவுக்கு ரவிக்குமாரை மிகவும் பிடித்துவிட்டது.கடந்த வாரம் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மணமகன் ரவிகுமார் தலைப்பாகையுடன் சடங்குகளில் பங்கேற்றார். தாலி கட்ட இன்னும்  சில நிமிடங்களே இருந்த நிலையில், அதிக வியர்வை காரணமாக ரவிக்குமார் தனது தலைப்பாகையை  கழற்றினார்.

அப்போதுதான் தெரிந்தது மணமகனுக்கு வழுக்கைத் தலை என்று. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயா, உடனடியாக மணமேடையில் இருந்தது கீழே இறங்கி, ரவிக்குமாரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

அங்கிருந்த உறவினர்கள் ஸ்ரேயாவை சமாதானப்படுத்த முயன்றும் அது தோல்வியிலேயே முடிந்தது. ஸ்ரேயாவின் பிடிவாதத்தால் திருமணம் நின்றது. மணமகள் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ரவிகுமார், தனது வீட்டு அருகில் இருக்கும் ஏழை காய்-கறி வியாபாரி ஒருவரின் மகளை அதே முகூர்த்தத்தில் திருமணம்  கொண்டார்.