Breaking : 2-வது முறையாக கர்நாடக முதலமைச்சரானார் சித்தராமையா.. டி.கே சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்

Breaking : Siddaramaiah became the Chief Minister of Karnataka for the 2nd time.. DK Sivakumar sworn in as Deputy Chief Minister

சமீபத்தில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு வழியாக பலகட்ட ஆலோசனைக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இன்று பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. பதவியேற்பு விழாவைக் காண மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் பெங்களூரு வந்துள்ளனர்.. மதியம் 12.30 மணிக்கு விழா தொடங்கினாலும், காலை 8 மணி முதலே மக்கள் மைதானத்திற்கு வரத் தொடங்கினர்.

இதையும் படிங்க : Who is Siddaramaiah?: 2வது முறை கர்நாடக முதல்வராகும் சித்தராமையாவின் அரசியல் வரலாறு

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் 2-வது முறையாக சித்தராமையா முதலமைச்சராகி உள்ளார். அவரை தொடர்ந்து  துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதன்படி கர்நாடக அமைச்சரவையில் முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வரா, எம்எல்ஏக்கள் எம்பி பாட்டீல், பிரியங்க் கார்கேஸ் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். இந்த விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,  பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, விசிக தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : Who is DK Shivakumar?: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios