பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. பிலிப்பைன்ஸ் ஏற்கனவே பிரம்மோஸை வாங்கிவிட்ட நிலையில், பல நாடுகள் இந்தியாவிடம் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
Brahmos Supersonic missile: பாகிஸ்தானின் சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்தியாவின் சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க உலக நாடுகள் வரிசையில் நிற்கின்றன. பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக நியூஸ்18 உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை, உலகின் வேகமான மற்றும் துல்லியமான கப்பல் ஏவுகணைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா வலுவான பதிலடிஅளித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, எல்லையில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்தது. இருப்பினும், துல்லியமாக தாக்கும் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு பயந்து, பாகிஸ்தான் எல்லை மோதல்களில் இருந்து விலகி, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இந்த நிகழ்வுக்குப் பின்னர், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியாவின் ஏவுகணை சக்தியாக பரிமாணம் எடுத்து இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு 17 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரம்மோஸ் வாங்குவதற்கு இந்தியாவுடன் எந்த நாடுகள் ஒப்பந்தம்
பிரம்மோஸை வாங்குவதற்கு இந்தியாவுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு பிலிப்பைன்ஸ். 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது. இருப்பினும், இப்போது, பிலிப்பைன்ஸ் தவிர, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புருனே, பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசுலா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, பல்கேரியா மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளும் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
பிரம்மோஸ் ஏவுகணையின் அதீத வேகம்
பிரம்மோஸ் ஏவுகணை தற்போது இந்தியாவின் அதிவேக ஏவுகணையாகும். முதன்முதலில் பிரம்மோஸ் ஏவுகணையை ஜூன் 12, 2001 அன்று இந்தியா சோதித்தது. இதன் பிறகு, இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தில் பல புதுப்பிப்புகள் செய்யப்பட்டன. பிரம்மோஸ் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் NPO மஷினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். பிரம்மோஸ் என்ற சூப்பர்சோனிக் ஏவுகணை, மேக் 3 வேகத்தை போன்றது. அதாவது சத்தம் அடையும் நேரத்தை விட அதீத வேகத்தில் சென்று தாக்கும் திறன் கொண்டது. 200-300 கிலோகிராம் எடையை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை, 800 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் நகரங்களை எரிக்க பிரம்மோஸ் ஒன்றே போதுமானது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை
பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை வாங்குவதற்கு இந்தோனேசியா 200 முதல் 350 மில்லியன் டாலர் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வியட்நாம் அதன் ராணுவம் மற்றும் கடற்படை இரண்டிற்கும் ஏவுகணைகளை வழங்குவதை உள்ளடக்கிய 700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு திட்டமிட்டுள்ளது.
எதிரிகளுக்கு பூச்சாண்டி காட்டிவிட்டு தாக்கும் பிரம்மோஸ்
பிரம்மோஸ் கப்பல் ஏவுகணைகளின் தனிச்சிறப்பு வேகத்துடன் துல்லியமாக செயல்படும். தரை மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரம் வரையிலான இலக்குகளை இது தாக்கும். எதிரி ரேடார்களுக்கு இது தெரியாததால், பிரம்மோஸ் அதன் இலக்கை எளிதில் அடைந்து பெரும் அழிவை ஏற்படுத்தும். மேக் 2.8 மற்றும் மேக் 3.5 க்கு இடையிலான வேகத்தில் பயணிக்கும் பிரம்மோஸ், வழக்கமான சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் எதிரி பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவச் செய்யும்.
