Asianet News TamilAsianet News Tamil

சிறுவனின் உயிரை குடித்த ஆன்லைன் கேம்; தற்கொலைக்கு ப்ளூ பிரிண்ட் தயாரித்து விபரீத முடிவு

புனேவில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் தனது தற்கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு வரைபடமாக வரைந்து 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

Boy addicted to online games commits suicide by jumping from 14th floor in Pune vel
Author
First Published Aug 3, 2024, 1:08 PM IST | Last Updated Aug 3, 2024, 1:08 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 15 வயது மாணவர் கடந்த 26ம் தேதி இரவு 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலை காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைந்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எப்படி தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்ற விரிவான திட்ட அறிக்கையை அம்மாணவன் துள்ளியமாக படமாக வரைந்து வைத்திருந்ததைக் கண்டு காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் - இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்

சிறுவனின் வரைபடத்துடன் சேர்ந்து ஒரு கேமிங் குறியீட்டில் எழுதப்பட்ட பல ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். சிறுவனின் தந்தை நைஜீரியாவில் வேலை செய்து வரும் நிலையில், சிறுவன் தனது தாய் மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இது தொடர்பாக சிறுவனின் தாய் கூறுகையில், தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்த சிறுவன் ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகினான்.

மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கு முதல் நாளில், நாள் முழுவதும் கத்தியுடன் கேம் விளையாடி வந்தான். பின்னர் நான் கண்டித்ததைத் தொடர்ந்து இரவின் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்குச் சென்று விளையாடத் தொடங்கினார். பின்னர் இரவில் வாட்ஸ்அப் குழுவில் சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பின்னர் சிறுவனின் அறைக்கு சென்று பார்த்தபோது அவன் அங்கு இல்லை. மாறாக கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார்.

School Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வரும் திங்கட்கிழமை விடுமுறை! வெளியான அறிவிப்பு!

மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு கட்டத்திற்கு பின்னர் சிறுவர்களை அடிமையாக்கி அவர்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடும் மாணவர்கள், சிறுவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களின் செயல்பாடுகளும் மாறுகின்றன. இதனிடையே அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்தும் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios