மணிப்பூரில் இரு சமுதாய மக்களுக்கு இடையேயான மோதல் கலவரமாக வெடித்ததால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும் நிலையில், உதவி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை மன்றாடி கேட்டுள்ளார் பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம்.
மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்திற்கு பழங்குடியின சமூகம் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த பேரணியின்போது வன்முறை வெடித்தது.
அந்த வன்முறையில் வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு பெரும் கலவரமாக வெடிக்க, சாலையில் நின்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர்.
50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆக்டிவ் இணைய பயனர்களாக உள்ளனர் : அறிக்கை
இந்த வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் என 7,500 பேரை பாதுகாப்பாக இரவில் இருந்து வெளியேற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இணையதளம் அடுத்த 5 நாட்களுக்கு முடக்கப்பட்டதுடன், 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து டுவீட் செய்துள்ள பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், எங்கள் மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது. தயவுசெய்து உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
