50,000 கோடியில்.. 8 தேசிய அதிவேக நெடுஞ்சாலை.. இதனால் என்னென்ன பயன்? பிரதமர் பகிர்ந்த முக்கிய தகவல்!
National High Speed Road : அமைச்சரவை, இந்தியாவில் சுமார் 936 கிலோமீட்டர் நீளம் கொண்ட, 8 தேசிய அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்க 50,000 கோடியில் திட்டம் தீட்டியுள்ளது.
அந்த எட்டு தேசிக அதிவேக நெடுஞ்சாலைகள் என்னென்ன?
ஆறு பாதைகள் (Lane) கொண்ட ஆக்ரா - குவாலியர் தேசிய அதிவேக நெடுஞ்சாலை, நான்கு பாதைகள் கொண்ட காராப்பூர் - மோர்கிராம் தேசிய அதிவேக நெடுஞ்சாலை, ஆறு பாதையில் கொண்ட தாரட் - மெஹ்சானா - அகமதாபாத் தேசிய அதிவேக நெடுஞ்சாலை, நான்கு பாதையில் கொண்ட அயோத்தியா ரிங் ரோடு.
நான்கு பாதையில் கொண்ட ராய்ப்பூர் - ராஞ்சியின் பாதல்கோன் மற்றும் குமியா இடையேயான தேசிய அதிவேக நெடுஞ்சாலை, ஆறு பாதைகள் கொண்ட கான்பூர் ரிங் ரோடு, நான்கு பாதைகள் கொண்ட வடக்கு கவுகாத்தி பைபாஸ் (ஏற்கனவே உள்ள புறவழிச்சாலையை மேம்படுத்துதல்), மேலும் எட்டு பாதைகள் கொண்ட புனே அருகே உள்ள நாசிக் பாடா - கெத் தேசிய நெடுஞ்சாலை.
செப்டம்பரில் மீண்டும் நிலச்சரிவு.. வெள்ளம் வரும்.. லா நினா பற்றி எச்சரித்த இந்திய வானிலை மையம்!
இந்த 8 இடங்களிலும் சுமார் 50,000 கோடி மதிப்பில் தேசிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சரி இதனால் என்ன பயன்?
ஆக்ரா மற்றும் கௌகாத்தி இடையேயான தேசிய நெடுஞ்சாலையால் பயண நேரம் 50 சதவீதம் குறையும், மேற்கு வங்க பொருளாதாரத்தை உயர்த்த காராப்பூர் - மோர்கிராம் நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. கான்பூரைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள நெரிசலை குறைக்க கான்பூர் ரிங் ரோடு திட்டம் பெரிய அளவில் உதவும்.
ராய்பூர் ராஞ்சி நெடுஞ்சாலையை நிறைவு செய்வதன் மூலம் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். தடையற்ற துறைமுக இணைப்பு மற்றும் குறைக்கப்பட்ட தளவாடச் செலவுக்காக குஜராத்தில் அதிவேக சாலை வலையமைப்பை முடிக்க தாராட் மற்றும் அகமதாபாத் இடையே நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.