Asianet News TamilAsianet News Tamil

செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு!

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையேயான வாராந்திர ரயிலுக்கு இன்றுமுதல் முன்பதிவு தொடங்கியது.

Booking for Special trains from Ramanathapuram to Secunderabad begin today
Author
First Published Jan 4, 2023, 10:28 AM IST

செகந்திராபாத் - ராமநாதபுரம் இடையே வாரம் தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுபற்றி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செகந்திராபாத் ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஜனவரி  4ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும். இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்படும். மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரத்துக்கு வந்துசேரும்.

ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும். இந்த ரயில் ராமநாதபுரத்தில் காலை 9.50 மணிக்குப் புறப்படும். மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடையும்.

இவ்விரு ரயில்களும் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது.

ஏசி வசதியுடன் 2 டியர் பெட்டிகள் 3, 3 டியர் பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் 10, இருக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் 2 உள்ளன.

உலகின் மிக உயரமான போர்முனையில் முதல் பெண் ராணுவ அதிகாரி!

Follow Us:
Download App:
  • android
  • ios