bomb threat to guruvayur temple
கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு மர்ம நபர் இன்று காலை தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்ததால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம், குருவாயூரில் பிரபலமான கிருஷ்ணர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த கோவில் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக குற்றம் சாட்டிய மர்ம நபர் ஒருவர், கோவிலை அழித்துவிடப் போவதாக, போனில் மிரட்டல் விடுத்தார்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் குருவாயூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் மீது வழக்குப் பதிவு செய்து, போனில் மிரட்டல் விடுத்தவர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், மிரட்டல் காரணமாக குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிரிக்கப்பட்டு உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களும் கோவிலில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
