Asianet News TamilAsianet News Tamil

உங்கள் மகனை கடத்திட்டோம்.. பணம் கேட்டு மிரட்டிய கும்பல் - இறுதியில் சூட்கேசில் காத்திருந்த அதிர்ச்சி!

Kolkata : 19 வயது மாணவன் ஒருவரை கடத்தி, அவருடைய பெற்றோரை மிரட்டி பணம் கேட்ட நிலையில், அந்த மாணவரின் இறந்த உடல் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

body of 19 year old student found inside a suitcase kolkata police in investigation ans
Author
First Published Oct 6, 2023, 6:54 PM IST

நகரின் நியூ டவுன் பகுதியில் உள்ள மகிஷாபதன் என்ற இடத்தில் அந்த மாணவர் வசித்து வந்த வாடகை வளாகத்தில் உள்ள கட்டிலுக்கு அடியில் சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த சாஜித் ஹொசைன் (வயது 19) உடல் கண்டெடுக்கப்பட்டது. மால்டா மாவட்டத்தின் பைஸ்னாப்நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவரது மொபைல் எண் தொடர்புகொள்ளமுடியாத நிலையில் இருந்துள்ளது. நீட் தேர்வுக்காக அந்த மாணவர், அவ்விடத்தை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் என்று விசாரணையில் தெரிவித்துள்ளது. அந்த மாணவன் காணாமல் போனதை அடுத்து, அவரது பெற்றோருக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. 

உடனே இது குறித்து அவரது தந்தை புதுநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இரு நாட்களாக அந்த மாணவனை போலீசார் தேடிவந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அந்த சூட்கேஸை கண்டுபிடித்து, மாணவனின் மரணம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர் போலீசார்.

"இறந்த மாணவன் சாஜித்க்கு சில பானங்கள் வழங்கி, பின்னர் தலையணையால் அவர் அமுக்கி கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும். மாணவன் கொலை செய்யப்பட்ட பிறகு, பெற்றோருக்கு மிரட்டல் அழைப்பு வந்ததா? அல்லது உயிருடன் இருந்தபோதே அழைப்பு வந்தாக என்பது குறித்தும் விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios