முசாஃபர்பூர் படகு விபத்து: 20 குழந்தைகள் மீட்பு!
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் சுமார் 30 குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகானது, முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது வரை 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசயம், மேலும் 10 குழந்தைகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலுக்கும் இஸ்ரோவுக்கும் சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு! என்ன தெரியுமா?
இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், “சம்பவம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.” என்றார்.