Asianet News TamilAsianet News Tamil

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அரசை கவிழ்க்க பாஜக சதி… மம்தா அதிர்ச்சி குற்றச்சாட்டு…

bjp try conspiracy to topple the tmc govt in west bengal
bjp try conspiracy to topple the tmc govt in west bengal
Author
First Published Jul 10, 2017, 8:43 AM IST


மேற்கு வங்கத்தில் கலவர  சூழ்நிலையை உருவாக்கி  குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக  சதித் திட்டம் தீட்யுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தனி மாநிலம் கேட்டு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்துக்கு பாஜகதான் காரணம் என்று என்று மம்தா பானர்ஜி  குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக  பாஜக  சூழ்ச்சி வலைகளை பின்னியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மம்தா, பாஜக பின்னணியுடன் கூடிய வெளிநாட்டு  சதி இதில் உள்ளதாகவும் கூறினார்.

அதன் ஒரு பகுதியாக பாஜகவினர் கலவரத்தை தூண்டிவிட்டுள்ளதாகவும் இப்படி செய்வதால் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே இது நாசமாக்கிவிடும் என்றும் மம்தா குற்றம்சாட்டினார்.

இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது என்றும். மேற்கு வங்காளத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது என்றும் மர்தா பானர்ஜி கூறினார்.

கலவரத்தை ஒடுக்குவதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை என தெரிவித்த மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்துக்கு கூடுதல் மத்திய படையை அனுப்பும்படி கேட்டும் அதையும் மத்திய அரசு செய்யவில்லை என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios