BJP says charges against Amit Shahs son false and derogatory
பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகனின் நிறுவனத்தின் விற்றுமுதல் கடந்த ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது குறித்து பிரதமர் மோடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரூ.80 கோடி
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா வின் மகன் ஜெ ஷா. இவர் டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவட் லிமிட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், ‘தி வயர்’ எனும் செய்தி இணையதளம் நேற்று பரபரப்பான அறிக்கையை பிரசுரித்தது.
அதில், கடந்த 2014-15ம் ஆண்டு நிலவரப்படி அமித் ஷா மகனின் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ. 50 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், 2015-16ம் ஆண்டில் இது 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80.50 கோடியாக உயர்ந்துள்ளது என்று வெளியிட்டு இருந்தது.
விசாரணை
தி வயர் இணையதளம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக வைத்து அமித் ஷா மகன் ஜெ ஷா மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சிவலியுறுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-
எப்படி உயர்ந்தது?
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா வின் மகன் நிறுவனத்துக்கு பங்குச் சந்தையில் பங்குகள் கிடையாது, சொத்துக்கள் கிடையாது, கையிருப்பு சரக்குகள் இல்லை, அப்படி இருக்கும் கடந்த 2014-15ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் விற்றுமுதல் இருந்த நிறுவனம், அடுத்த ஒரு ஆண்டுக்குள் ரூ.80.50 கோடி விற்றுமுதலாக உயர்ந்தது எப்படி என்பது வியப்பாக இருக்கிறது?.
விசாரணைக்கு உத்தரவிடுவாரா?
இதுதான் அரசு அதிகாரிகள் துணையுடன், தொழிலதிபர் செய்யும் தில்லுமுல்லு. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவாரா?; குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா?; அமித் ஷா மகன் மீது நேர்மையான விசாரணைக்கு மட்டும் பிரதமர் மோடி உத்தரவிட்டால் போதுமா?
என்ன செய்யப்போகிறார்?
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்ைக எடுப்பேன் என மோடி உறுதியளித்துள்ளார். பிரதமராக இருக்கும் மோடி, மக்களின் சொத்துக்கு பாதுகாவலர். நாங்களும் ஊழல் செய்யமாட்டோம்; யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டோம் என்று மோடிதான் கூறியுள்ளார். கம்பெனி பதிவில் அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.80 கோடி என்பது தெளிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவர்கள்தான் பலன் பெற்றவர்களா?
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையால் உண்மையாக பலன்பெற்றவர்களை இறுதியாக கண்டுபிடித்துவிட்டோம். ரிசர்வ் வங்கியும், ஏழை , எளிய மக்களும் பலன் பெறவில்லை. ‘ஷா’ வின் மகன் ‘ஷா’ தான் பலன்பெற்றுள்ளார். ஜெய் அமித்’’ எனத் தெரிவித்தார்.
