உத்தரப் பிரதேசத்தில் பாஜக முந்தினாலும் சமாஜ்வாடி கட்சி கடும் போட்டியை அளிப்பதாக ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது. 

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக அரசை மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 403 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் 7- ஆம் தேதி அன்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.யாக இருக்கும் வாரணாசி உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 54 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்துள்ளது. 

7-ஆம் தேதி தேர்தல் முடிந்த பிறகு 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10 அன்று எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரிய வரும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக முந்தினாலும் சமாஜ்வாடி கட்சி கடும் போட்டியை அளிப்பதாக ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்று வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜே.பி. நட்டா கூறுகையில், “ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். பாஜகவுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன். உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக அரசை மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.