Asianet News TamilAsianet News Tamil

மோடி-அமித்ஷா திடீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு..! வரலாற்றில் இல்லாத பிரச்சாரம் செய்ததாக பெருமிதம்..!

பிரதமர் மோடி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் திடீரென டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

BJP President Amit Shah: We started our election campaign from January 16...Our target
Author
Delhi, First Published May 17, 2019, 4:47 PM IST

பிரதமர் மோடி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் திடீரென டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

முதலில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை போலவே தற்போதும் பாஜக வெற்றி உறுதி எனவும் அமித்ஷா தெரிவித்தார். மிகப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடிப்பதுமட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு உறுதியான நிலையான ஆட்சியை அளிப்போம். அதுமட்டுமின்றி இந்த முறை பாஜக கூடுதல் பலத்தோடு ஆட்சியை பிடிக்கும். அதற்காக பிரதமர் மோடி வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.

 BJP President Amit Shah: We started our election campaign from January 16...Our target

பிரதமர் மோடியின் இந்த பிரச்சாரம் பயணமே ஒரு சாதனையாகும். இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று முடியடைய உள்ள நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க இன்னும் 5 நாட்களே உள்ளே நிலையிலும், மோடி மற்றும் அமித் ஷா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. BJP President Amit Shah: We started our election campaign from January 16...Our target

தொடர்ந்து பேசிய அமித்ஷா மீண்டும் பிரதமர் மோடியே ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைப்பதாகவும், மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். 5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி நாள், சிறப்பாக பணியாற்றினோம் என்ற மகிழ்ச்சி உள்ளது. 133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும் தேசிய தலைவர் அமித்ஷா நன்றி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios