bjp opinion about prime minister

பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் வீழ்த்த முடியாது என்று பா.ஜ.க உரக்கச் சொல்லியிருக்கிறது.....

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பணமதிப்பிழப்பு விவகாரம் பிரதமர் மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை பலத்தோடு அக்கசட்சி ஆட்சி அமைத்துள்ளது. கோவாவில் இதர கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. மணிப்பூரிலும் அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

மோடி மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் இதன் மூலம் பொய்யாகி இருப்பதாக பா.ஜ.க. பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள் தலைவர் சஞ்சய் சிங்," பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பேசியிருந்தார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில் மோடி," பிரதமர் ஆகலாம் என்று அரசியல் கட்சிகளின் திட்டம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் ஆகவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நினைக்கிறது. அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, உள்ளிட்டோரும் இந்தப் போட்டியில் உள்ளனர்."

"ஒவ்வொரு மாநிலக் கட்சியும் தங்கள் தலைவர்களே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கருதுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கற்பனையான ஒன்று மட்டுமே.. ஆனால் இவர்களில் யாரும் பிரதமர் ஆக முடியாது."