உத்தரப்பிரதேச மாநில மக்களவை இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றி பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பாஜக தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது.  கோரக்பூர் லோக்சபா தொகுதி மற்றும், உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. உ.பி. மேலவை தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் பதவிகளில் தொடருகிறார்கள்.

எனவே இவர்கள் ராஜினாமா செய்ததால் காலியான இந்த இரண்டு தொகுதிகளும் தேர்தலை சந்தித்தது.  இந்த 2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை அறிவிக்கபோவதில்லை என அறிவித்தது அதேநேரத்தில், சமாஜ்வாதி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாயாவதி பேட்டியளித்தார். இந்த பேட்டி, பாஜகவுக்கு சற்று அதிர்வைக் கொடுத்தது. இரண்டு கட்சி தொண்டர்களையும் இது இணைத்தது.

உ.பியில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு இரண்டு கட்சி தொண்டர்களும் வாக்கு கேட்டார்கள். இந்த தேர்தல் பாஜக வரலாற்றில் மறக்க முடியாத மிகப்பெரும் அடியாக மாறியிருக்கிறது.

தற்போது அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதால் பாஜகவின் எதிர்கால அரசியலுக்கு இது பெரும் அடியாக விழுந்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில மக்களவை இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றி பாஜக சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பாஜக தற்போது மோசமான நிலையில் இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.