சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்… பாஜக எம்.பி. ராஜிவ் சந்திரசேகர் வலியுறுத்தல்!

கேரள இந்துக்கள் மற்றும் உண்மையான அய்யப்ப பக்தர்களுக்கு நிம்மதியைத் தரும் வகையில் சபரிமலை பிரச்சனையில்  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி ராஜிவ் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BJP MP Rajiv chandrasekar says that supreme court should reconsider the sabarimala judgement

கேரள இந்துக்கள் மற்றும் உண்மையான அய்யப்ப பக்தர்களுக்கு நிம்மதியைத் தரும் வகையில் சபரிமலை பிரச்சனையில்  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி ராஜிவ் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெயிட்டுள்ள அறிக்கையில் , அய்யப்பனை தரிசிக்க நான்  கடந்த 25 ஆண்டுகளாக சபரிமலை செல்கிறேன். BJP MP Rajiv chandrasekar says that supreme court should reconsider the sabarimala judgement

நான் இளவயதாக இருந்போது அமெரிக்காவுக்கு படிக்க சென்ற காலம் தவிர நான் தொடர்ந்து சபரிமலை சென்று வருகிறேன். அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு கடந்த 18 ஆண்டுகளாக அங்கு செல்கிறேன். அதுவும் நான் ஒரு குருசாமி. இந்த ஆண்டு மழை குறுக்கட்டதால் இதுவரை அங்கு  செல்லவில்லை என தெரிவித்துள்ளார். கேரளாவைப் பொறுத்தவரை பல கோயில்கள் இருந்தாலும் சபரிமலை என்பது பழமையும், கலாச்சாரமும் மிகுந்த கோவில். ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் 5 நாட்களுக்கு சபரிமலை  நடை திறந்திருக்கும். இங்கு  எல்லா வயது ஆண்களும் பக்தி பரவசத்துடன் வந்து தரிசனம் செய்கின்றனர். 

அதேபோல் 50 வயதுக்கு மேற்பட்ட  பெண்களும் இங்கு வருகின்றனர். ஏழை பணக்காரன்  என்ற வித்தியாசமில்லாமல் இங்கு வரும் லட்சோபலட்சம் பக்தர்களுள் நானும் ஒருவன். இங்கு பல முறை நாள் எனது தாயாருடன் வந்து தரிசனம் செய்திருக்கிறேன் என ராஜிவ் சந்திர சேகர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இந்த உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயன்று வருகிறது. அதே நேரத்தில் பெண்கள் என்ற பாகுபாடு இங்கு இல்லை என்பதே  உண்மை. BJP MP Rajiv chandrasekar says that supreme court should reconsider the sabarimala judgement

இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், பெண்களும் போராடி வருகின்றனர். இந்த பிரச்சனையைப் பொறுத்தவரை பக்தர்களின்  நம்பிக்கையா ? அல்லது சட்டமா என்றால் நிச்சயமாக நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் கேரள அரசு இந்துக்களின் மனதை புண்படுத்துதிலேயே கவனம் செலுத்துகிறது. இப்பிரச்சனையில் அரசு பிடிவாதமாக இருப்பது, முத்தலாக் மற்றும் மசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பார்களா என் கேள்வி இயற்கையாவே எழுகிறது. என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் முன் ஆண்கள்,  பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. கடவுள் முன் பாகுபாடுகள் நிச்சயமாக கிடையாது. 

ஆனாலும்  சபரிமலை பிரச்சனையை பொறுத்தவரை நான் கேரள அரசின் முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். அய்யப்பனைப் பொறுத்தவரை  ஆண், பெண் பாகுபாடு கிடையாது. அதனால் இதன் தொன்மையை நாம் ஆய்வு செய்தே ஆக வேண்டும். பொதுவாக இந்து கலாச்சாரம் என்பது ஆவணப்படுத்தப்படாத ஒன்று. ஆனால் கிறிஸ்துவம் உள்ளிட்ட சில மதங்கள் அதன் கோட்பாடுகளை வகுத்து வைத்துள்ளன.BJP MP Rajiv chandrasekar says that supreme court should reconsider the sabarimala judgement

இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்மொழியாகவே உள்ளன. அதே போல்தான் சபரிமலையைப் பொறுத்தவரை அதன் பாராம்பரியம் நூற்றக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.ஆனால் தற்போத அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என சட்டம் போட்டிருப்பது தவறானதும், ஆபத்தானதுமாகும். இது லட்சக்கணக்கான இந்து பக்தர்களின் மனதைப் புண்படுத்துகிறது. இதே போல் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவுக்கு கேரள அரசும்,  தேசம் போர்டும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

மேலும் அய்யப்பன் கோவிலின் பெருமை, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும். கேரள இந்துக்களைப் பொறுத்தவரை அய்யப்பன் கோவிலில் புனிதம் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மதிப்பளிக்க வேண்டும்.  சபரிமலை பிரச்சனையைத் பொறுத்தவரை மத நம்பிக்கை இல்லாத அமைப்புகள், கட்சிகள் போன்றவை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்  முன்னாள் தலைமை நீதிபதி தீர்ப்பளித்துவீட்டார். BJP MP Rajiv chandrasekar says that supreme court should reconsider the sabarimala judgement

தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று என் மனதில் தோன்றுகிறது. இதுதான் கேரள இந்துக்கள் மற்றும் உண்மையான அய்யப்ப பக்தர்களுக்கு நிம்மதியைத் தரும். சரணம் அய்யப்பா !! என பாஜக எம்.பி. ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios