மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன்
பா.ஜ.க வின் முன்னாள் செய்தி தொடர்பாளரும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாநில இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தொழில் முனைவு, திறன் வளர்ச்சி, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் ராஜீவ் சந்திரசேகர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் இன்று தனது 59வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
மத்திய இணை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய அமைச்சருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
மேட்டூர் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி; நிவாரணத் தொகை வழங்க முதல்வர் உத்தரவு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பா.ஜ.க வின் முன்னாள் செய்தி தொடர்பாளரும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாநில இணை அமைச்சருமான திரு ராஜீவ் சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது