தெலுங்கானாவில் துபாக் இடைத்தேர்தல் நடந்தது. பாஜக சார்பில் எம்.ரகுநந்தன் ராவும், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் சோலிபேட்டா சுஜாதாவும் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், ஆரம்பம் முதலே ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளரைவிட, பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ் தான் முன்னிலை வகிக்கிறார்.

பதினாறாம் சுற்று எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் 45,994 வாக்குகளையும், டி.ஆர்.எஸ் வேட்பாளர் 44,260 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் 14,832 வாக்குகளை மட்டுமே பெற்று காணாமல் போயுள்ளது.

2,485 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிக்கு அருகில் இருக்கிறார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை ஓரங்கட்டி பாஜக முன்னிலை வகிப்பது, தெலுங்கானா அரசியலில் மாற்றத்திற்கு வித்திடும் வகையில் உள்ளது.