ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும்போதுகூட மக்களில் ஒரு சிலர் சாகிறார்கள் என்று மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் வினய் சகாஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். 

ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை மாற்ற வங்கிகளில், தபால் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் போது, வயதானவர்கள் சுருண்டு விழுந்த இறந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் இந்த பதிலை தெரிவித்தார். 

போபால் நகரில் மாநில பாரதியஜனதா துணைத்தலைவர் வினய் சகாஸ்ரபுத்தே நிருபர்களுக்கு போபால் நகரில் இன்றுபேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சமீபத்தில் ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்காக வரிசையில் நின்றிருந்த மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் வினோத் பாண்டே(வயது69) சுருண்டு விழுந்து இறந்தார். இது போல் பல மாநிலங்களில் மக்கள் இறந்துள்ளனர். அது குறித்து கருத்து கேட்ட னர்.

அப்போது அவர் கூறுகையில், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் போது அதில் சிலர் சுருண்டு விழுந்து இறக்கிறார்கள். அதுக்கு கேள் வி கேட்க முடியுமா. ?

பிரதமர் மோடியின் முடிவு, அறிவிப்பு என்பது, கருப்பு பணத்தை ஒழிக்கும் சத்தியாகிரஹம் போன்றது. இந்த சத்தியாகிரஹத்தில் மக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும், அதன் சிரமங்களை பொருத்துக்கொள்ள வேண்டும் என மோடி எதிர்பார்கிறார். 

மக்கள் செத்து மடிவதற்கு பெயர்தான் சத்தியாகரஹமா ?என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

மேலும், திருமணம், எதிர்பாரா விபத்து, இறப்பு போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்வோருக்கு அதிகமானபணம் தேவைப்படும் அப்போது, அவர்கள் எங்கு செல்வார்கள் ? என்ற கேள்விக்கும் அவர் பதில் அளிக்க பா.ஜனதா தலைவர் வினய் மறுத்துவிட்டார்.