அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி  ஜூத்து சவுத்ரி வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

டெல்லியில் மயூர் விஹார் பகுதியில் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஜூத்து சவுத்திரி என்பவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜூத்து சவுத்ரி வீட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

முக்கிய ஆதாரங்கள் சிக்கின

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜூத்து சவுத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்பட முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

சிசிடிவி காட்சி

மேலும், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.