சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக தீவிரவாதிகளை ஆதரிக்கிறார் ராகுல் - அனில் ஆண்டனி காட்டம்! என்ன நடந்தது?
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி, பாலஸ்தீனத்தை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடந்த படுகொலைகள் தவறு என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, பாலஸ்தீன ஹமாஸ் குழு, இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், எல்லையில் இருந்து ஏராளமான ஊடுருவல்களையும் நடத்தியது. கொடூரத்தின் உச்சமாக இறந்த ஒரு இஸ்ரேல் பெண்ணின் உடலை, அரை நிர்வாணமாக ஒரு ட்ராக்கில் ஏற்றி ஊர்வலம் சென்றது. இந்நிலையில் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தற்போது போர் பிரகடனம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே.
காங்கிரஸ் பாலஸ்தீனத்தை ஆதரித்ததும் - பாஜகவின் விமர்சனமும்
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் தீர்மானம் தொடர்பாக காங்கிரஸில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த அனில் கே. ஆண்டனி, ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இது காங்கிரஸின் மோசமான தீர்மானம் என்று அனில் ஆண்டனி கூறினார். அடிப்படை கண்ணியம் மற்றும் பொது உணர்வு இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்!
இந்தியாவின் மிக முக்கியமான நண்பனும் கூட்டாளியுமான இஸ்ரேல் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில், மதச் சித்தாந்தத்தால் கண்மூடித்தனமான இஸ்லாமியப் காட்டுமிராண்டிகள் கூட்டம் அட்டூழியங்களைச் செய்யும் போது, அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸூம் இறங்கியுள்ளது. இது ஒரு வெறுக்கத்தக்க பயங்கரவாத செயல் என்பதை ஏற்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார் என்றும் அணில் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தீவிரவாதத்தை எதிர்க்க மறுத்துவிட்டார், மாறாக சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக பயங்கரவாதிகளை ஆதரிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அணில் கடுமையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களை சாடியுள்ளார்.
காசா மீது முழு முற்றுகை: இஸ்ரேல் அறிவிப்பு - போர் குற்றம்?