Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சு முடிந்தது! பா.ஜ.கவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க 17 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP JDU to contest equal number of seats
Author
Delhi, First Published Oct 27, 2018, 1:13 PM IST

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க 17 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலை லோக் ஜனசக்தி மற்றும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியுடன் இணைந்து பா.ஜ.க எதிர்கொண்டது. போட்டியிட்ட 29 தொகுதிகளில் 22 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை தற்போது பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து பா.ஜ.க எதிர்கொள்ள உள்ளது.BJP JDU to contest equal number of seats

இதனால் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் போட்டியிடுவது என்று பா.ஜ.க முடிவு செய்துள்ளது. இதற்கு ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் ஒப்புதல் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள 23 தொகுதிகளில் 16 ஐ ஐக்கிய ஜனதா தளம் எடுத்தக் கொள்ள உள்ளது. எஞ்சிய ஏழு தொகுதிகளை லோக் ஜன சக்தி மற்றும் ராஷ்ட்ரிய சமதா கட்சிகள் பிரித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BJP JDU to contest equal number of seats

கடந்த முறை 22 எம்பிக்கள் பீகார் மாநிலத்தில் இருந்து பா.ஜ.கவிற்கு கிடைத்த நிலையில் வரும் தேர்தலில் 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட பா.ஜ.க ஒப்புக் கொண்டிருப்பது அந்த கட்சி கூட்டணிக்கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 BJP JDU to contest equal number of seats

பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி என்பதால் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரி ஜனதா தளம் காங்கிரசுடன் இணைந்து களம் இறங்கினாலும் கூட இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் கிட்டத்தட்ட 5 எம்.பி பதவிகளை விட்டுக் கொடுத்து கூட்டணியை பா.ஜ.க தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios