கொரோனா குணமான நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்து பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜிந்தர்பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டது அதிர வைத்துள்ளது.

ராய்ப்பூர்: கொரோனா குணமான நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்து பாஜக முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜிந்தர்பால் சிங் பாட்டியா தற்கொலை செய்து கொண்டது அதிர வைத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சத்திஸ்கர் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜிந்தர்பால் சிங் பாட்டியா. போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர். குஜ்ஜி தொகுதி எம்எல்ஏவாக 3 முறை இருந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அவரை கொரோனா தாக்கியது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜிந்திர்பாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக அவர் குணம் பெற்று வீடு திரும்பினார். சத்திஸ்கரில் உள்ள சவுரியா டவுனில் இருக்கும் தமது சகோதரரின் கண்காணிப்பில் ராஜிந்தர் இருந்து வந்தார்.

இந் நிலையில் நேற்றிரவு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அதிர்ச்சியில் உறைந்து போன அவரது சகோதரர் குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். உடனடியாக விரைந்து அவர்கள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் குணம் பெற்று இருந்தாலும் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தாராம். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்திருக்கிறது.

ராஜிந்தர்பால் சிங் பாட்டியாவின் மறைவு கட்சி தலைமையை அதிர வைத்து இருக்கிறது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.