ஏசியாநெட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோம்: கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை நசுக்கும் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கேரள பாஜக கூறியுள்ளது.
ஏசியாநெட் நியூஸ் உடனான தனது இரண்டு வருட ஒத்துழையாமையை முடிவுக்குக் கொண்டுவர பாஜகவின் கேரள பிரிவு முடிவு செய்துள்ளது. கேரளாவில் ஊடக நிறுவனங்கள் மீது ஆளும் கட்சியின் இடைவிடாத தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இத்தருணத்தில், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்துக்காக பாஜக துணை நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரண்டுமே மாநில அரசு இயந்திரத்தால் குறிவைக்கப்படுகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!
மேலும், "ஜனநாயக விழுமியங்களுக்கு பெயர் பெற்ற கேரளா, ஏசியாநெட் நியூஸ் மற்றும் அதன் பத்திரிகையாளர்களுக்கு எதிரான சிபிஎம்மின் இந்த பாசிச அணுகுமுறையை ஏற்க முடியாது. தற்போதைய சூழ்நிலை எமர்ஜென்சி காலகட்ட நாட்களை நினைவூட்டுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த பேருந்து விபத்துகள்: குறைந்தது 12 பேர் பலி; பல பயணிகளுக்குக் காயம்
கேரள முதல்வர் கண்டத்துள்ள அவர், "பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊடக சுதந்திரத்தை அழித்து, ஊடகவியலாளர்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை நசுக்கும் கம்யூனிஸ்ட் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ.க வலுவான பொதுப் போராட்டத்தை நடத்தும்" என்றும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் உறுதி அளித்துள்ளார்.
ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் எடிட்டர் சிந்து சூர்யகுமாருக்கு எதிராக பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதற்காக முன்னாள் துணை நீதிபதி எஸ் சுதீப்க்கு பல ஊடகவியலாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுதீப் இடதுசாரி அனுதாபி என்பதால் ஆளும் கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் விமர்சிக்கின்றனர்.