தெலுங்கானா மாநிலத்தில் துபாக் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக சார்பில் எம்.ரகுநந்தன் ராவும், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் சோலிபேட்டா சுஜாதாவும் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 23 சுற்று முடிவில், பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ் 62,772 வாக்குகளும் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளர் சோலிபேட்டா சுஜாதா 61,302 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செருக்கு ஸ்ரீநிவாஸ் ரெட்டி வெறும் 21,819 வாக்குகள் மட்டுமே பெற்றார்.