பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 70 லட்சம் வரை செலவழிக்கலாம்.  ஆனால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா வேட்பாளர் நடிகருமான சன்னி தியோல் இதைவிட அதிகமாக செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

 அவரது தேர்தல் செலவின அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில்,  தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  அதில் சன்னி தியோல் ரூபாய் 78 , 51 ,592  செலவழித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட ரூபாய் 8.51 லட்சம் அதிகமாக செலவழித்திருக்கிறார் சன்னி தியோல்.  இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அதேநேரம் சன்னி லியோனுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர், ரூபாய் 61 லட்சம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.