காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி, ஜார்ஜ் சோரோஸ் மற்றும் OCCRP ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.பியுமான சம்பித் பத்ரா இன்று எதிர்க்கட்சிகள் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை "துரோகி" என்றும், அவருக்கும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட நபர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சம்பித் பத்ரா “ இந்தியாவை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒரு ஆபத்தான முக்கோணம் பற்றித்தான் பேசப்போகிறோம். இந்த முக்கோணத்தின் ஒரு பக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் சொரோஸ், அமெரிக்காவின் சில ஏஜென்சிகள் இருக்கின்றன. முக்கோணத்தின் மற்றொரு பக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (OCCRP) என்ற பெரிய செய்தி போர்டல். மேலும் முக்கோணத்தின் மிக முக்கியமான பக்கம் ராகுல் காந்தி, அவர் மிகப்பெரிய துரோகி'," என்று கடுமையாக விமர்சித்தார்.
#WATCH | Delhi: BJP MP Sambit Patra says, " We are going to talk about this dangerous triangle which is trying to destabilise India. In this triangle, on one side it is George Soros from America, some agencies of America, another side of triangle is a big news portal named… படம்.twitter.com/1buxqOSVXR
— ANI (@ANI) டிசம்பர் 5, 2024
ராகுல்காந்தி OCCRP இன் அறிக்கைகளைப் பயன்படுத்திய சில நிகழ்வுகளை சம்பித் பத்ரா மேற்கோள் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் “ஜூலை 2021 இல், கோவிட் தாக்கம் உலகளவில் காணப்பட்டபோது, OCCRP, இந்தியாவின் Covaxin Covid-19 தடுப்பூசிக்கான 324 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து பிரேசில் விலகியதாக ஒரு கட்டுரையை வெளியிட்டது. நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் முயற்சி நடந்தது. இந்த அறிக்கை வெளியான உடனேயே, காங்கிரஸ் கட்சி இந்திய அரசாங்கத்தையும் தடுப்பூசியையும் தாக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. OCCRP ஆணையிடுகிறது அதனை ராகுல் காந்தி பின்பற்றுகிறார்," என்று பாஜக எம்.பி கூறினார்.
மேலும் “ அதேபோல், OCCRP அறிக்கை மற்றும் இந்திய சந்தைகளை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட பெகாசஸ் பிரச்சினையில் ராகுல் காந்தி அரசாங்கத்தை விமர்சித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்திக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் OCCRP கூறியது, இதில் இரு காங்கிரஸ் தலைவர்களும் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படும் சிலரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசி இருக்கிறார்.” என்றும் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளா: 2100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு
அதேபோல், பாஜக தலைவர் நிஷிகாந்த் துபேவும் 'வெளிநாட்டில் இருந்து தேசிய நலன் மீதான தாக்குதல்களில்' காங்கிரஸின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மக்களவையில் OCCRP பற்றிய மீடியாபார்ட் அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், , காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீர்குலைய செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறது” என்று துபே கூறினார்.
மேலும் “பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவின் வெற்றிக் கதையைத் தடம் புரளச் செய்ய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரு பிரிவினர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். மீடியாபார்ட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் OCCRP என்ற ஒரு அமைப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். OCCRP இன் வேலை இந்திய நாடாளுமன்றத்தை எப்படி நடத்தாமல் மூடுவது என்பதுதான். நான் 10 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். OCCRP ஏதேனும் அறிக்கை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சி உடனடியாக அதை ட்வீட் செய்யும்.
2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளா! கலாச்சார நிகழ்ச்சிகளில் சினிமா நட்சத்திரங்கள்!
மூன்று பிரச்சினைகள் உள்ளன, முதலாவது பெகாசஸ், அந்த நேரத்தில் நாடாளுமன்றம் சரியாக இயங்க முடியவில்லை. ஜூலை 18 அன்று, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சஞ்சய் ராவத் ட்வீட் செய்தனர், நாடாளுமன்றம் முடங்கியது இரண்டாவது ஹிண்டன்பர்க், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், ஜெய்ராம் ரமேஷ், சஞ்சய் ராவத் ட்வீட் செய்தனர், நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது. மூன்றாவதாக தடுப்பூசி பிரச்சினை,” என்று துபே கூறினார்.
BJP on front foot & it must be...to expose Soros, other foreign agencies & their Agents in "India" who are working overtime to derail Bharat's economy.
— BhikuMhatre (@MumbaichaDon) டிசம்பர் 5, 2024
.@nishikant_dubey once again on 🔥படம்.twitter.com/Kh4K3pAHCR
“பாரத் ஜோடோ இயக்கத்தில் பங்கேற்ற ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் சலில் ஷெட்டியுடனான உங்கள் உறவு பற்றி எதிர்க்கட்சித் தலைவரிடம் 10 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். பாரத் ஜோடோ இயக்கத்திற்கு அவர் பணம் கொடுத்தாரா? ராகுல் காந்தி அமெரிக்கா சென்று பங்களாதேஷ் இனப்படுகொலைக்குக் காரணமான முஷ்ஃபிகுல் ஃபசலைச் சந்தித்தார். அமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை எதிர்த்த இல்ஹான் உமர், ரோ கன்னா மற்றும் பார்பரா லீ ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்தார். காலிஸ்தானை உருவாக்க விரும்புபவர்கள், காஷ்மீரைப் பிரிக்க விரும்புபவர்களை நீங்கள் (ராகுல்) சந்தித்தீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?” என்று மேலும் கூறினார்.
