பெண் ஒருவர் மான் குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள பிஷ்னோய் சமுதாய மக்கள் வனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாப்பது அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளில் முக்கியமான ஒன்றாகவே உள்ளது. பிஷ்னோய் சமுதாய மக்கள் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் மட்டுமல்லாது அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். பிஷ்னோய் இன பெண்களிடம் ஒரு அபூர்வ பழக்கம் வழக்கத்தில் உள்ளது. அங்கு தாய்மார்கள் மானுக்கு பாலூட்டுவது இயல்பாக பார்க்கக்கூடியது.

அதாவது தாய்மான் இறந்துவிட்டால் அனாதையாகும் மான் குட்டிகளுக்கு பெண்கள் தாய்ப்பால் கொடுப்பார்கள். மூன்று மாதங்கள் வரை அந்த மான் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அவர்கள் பிறகு,அந்த குட்டிகளை காட்டில் விட்டு விடுவார்கள். இது பிஷ்னோய் மக்களுக்கும் கானகத்திற்குமான உறவு பிரிக்க முடியாத பந்தம் இருந்து வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பிஷ்னோய் பெண் ஒருவர் தாய் மானை இழந்த மான் குட்டிக்கு பாலூட்டும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதும். பர்வீன் கஸ்வான் என்ற ஐஎப்எஸ் அதிகாரி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில் புகைப்படத்தை பகிர்வு செய்துள்ளார்.

ஜோத்பூரில் உள்ள பிஷ்னோய் சமூக மக்கள் விலங்குகளை இவ்வாறு கவனித்துக்கொள்கிறது. இந்த அழகான விலங்குகள் அவர்களுக்கு குழந்தைகளுக்கு குறைவானவை அல்ல. ஒரு குட்டிக்கு பெண்மணி ஒருவர் பாலூட்டுகிறார் என்று பதிவு செய்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாய் மானை இழந்த மான் குட்டிக்கு பால் ஊட்டும் பெண்ணுக்கு, பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.