கேரளாவில் நடைபெறும் வன்முறைகளின் பின்னணியில் பாஜக உள்ளது என்று கேரள சட்டப் பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், வன்முறை தலைவிரித்தாடுகிறது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி குற்றம்சாட்டினார்.

கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஸ் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதற்கு ஆளும் கட்சியான, மார்க்சிஸ்ட்டை சேர்ந்த தொண்டர்கள்தான், இதற்கு காரணம் என, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர், குற்றம் சாட்டி வருகின்றன. . இந்நிலையில், நேற்று கேரளா வந்த மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி,  ராஜேஷின் வீட்டுக்கு சென்று, அவரதுகுடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். 

அப்போது கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம், வன்முறை தலைவிரித்தாடுகிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரள சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு காரணம் பாஜகதான் என குற்றம்சாட்டினார்.

இந்த மாநிலத்தில் பல இடங்களில்,  தாக்குதல்களின் பின்னணியில் பாஜக உள்ளதாக உளவுத்துறை தெரிவித்திருப்பதாக கூறினார். அதே நேரத்தில் இத்தகைய தாக்குதல்களை தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தேவைப்பட்டால் சிபிஎம் – பாஜக மோதல் குறித்த வழக்குகளை சிபிஐயுடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.