Asianet News TamilAsianet News Tamil

வினாத்தளை கசிய விட்டால் கடுமையான தண்டனை... பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா இன்று தாக்கல்

தேர்வுகளில் வினாத்தாள் கசிவு வழக்குகளில் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதா முன்மொழிகிறது.

Bill Against Paper Leaks to be Introduced in Parliament Today, Know All About It sgb
Author
First Published Feb 5, 2024, 1:39 PM IST

பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024 இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த மசோதா முக்கியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்வுகளில் வினாத்தாள் கசிவு வழக்குகளில் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதா முன்மொழிகிறது. திட்டமிட்ட குற்றங்களுக்கு 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றுமெ இந்த மசோதா கூறுகிறது.

வினாத்தாள் கசிவுகளால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான தகுதியான தேர்வர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி மற்றும் அரசு வேலைக்கான வாய்ப்புகளை இந்த மசோதா பாதுகாக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

10 நகரங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை! நீடித்த வெப்ப அலைகளால் உயரும் இறப்பு விகிதம்!

Bill Against Paper Leaks to be Introduced in Parliament Today, Know All About It sgb

இந்த மசோதா போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பொதுத் தேர்வுகளில் இணையப் பாதுகாப்பின் சவால்களைச் சமாளிக்க உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கும் இந்த மசோதா முன்மொழிகிறது.

இந்த மசோதாவின்படி, வினாத்தாள் கசிசு தொடர்பான வழக்குகள் துணை போலீஸ் சூப்பிரண்டு அல்லது உதவி போலீஸ் கமிஷனர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரியால் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தவொரு மத்திய நிறுவனத்திற்கும் விசாரணையை அனுப்பும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.

வினாத்தாள் கசிவு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருப்பதைக் கருத்தில் கொண்டு, தண்டனை விதிகள் உட்பட மசோதாவின் பல்வேறு அம்சங்களின் வரையறைகளை ஆராய ஒரு சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி, "பேப்பர் லீக் மாஃபியா" அந்த மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டதாகவும், அவர்கள் நீதி கோரி போராடி வருவதாகவும் அசோக் கெலாட் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியிருந்தார்.

காசி, மதுராவையும் விட்டுக் கொடுத்தால் கோயில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: கோவிந்த் தேவ் கிரி மகராஜ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios