bilkis bano case:பில்கிஸ் பானு வழக்கு: பெண்கள் பாதுகாப்பு பற்றி பிரதமர் வார்த்தையை நம்பலாமா: காங்கிரஸ் கேள்வி
பெண்கள் பாதுகாப்பு, மரியாதை குறித்து பிரதமர் மோடி சுதந்திரத்தினத்தன்று பேசியதை நம்பலாமா என்று பில்கிஸ் பானு வழக்கைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு, மரியாதை குறித்து பிரதமர் மோடி சுதந்திரத்தினத்தன்று பேசியதை நம்பலாமா என்று பில்கிஸ் பானு வழக்கைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு, அவரின் குடும்பத்தார் 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
முஸ்லிம்,கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இல்லை:மீண்டும் வர்ணாசிரமம்:இந்து தேசம் குறித்த வரைவு அறிக்கை
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஒரு கும்பல் தாக்கியது.
அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்தக் கும்பல் தாக்கி, அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேரை கொலை செய்தது.
அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 15 ஆண்டுகளாகசிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது.
இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸா தயாரிக்கிறாங்களா! ருசியின் ரகசியம் இதுவா
பாலியல் பலாத்காரம், 7கொலை செய்தவர்களை எவ்வாறு விடுவிக்கப்பட்டார்கள் எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில் “ சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில் பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசியதில் ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதா என்று மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். அவர்பேசிய பேச்சில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா.
பில்கிஸ் பானு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் குஜராத் அரசு நேற்று விடுதலைசெய்தது என்பது பாஜக அரசின் மனநிலையைக் காட்டுகிறது. கதுவா, உன்னாவ் பாலியல் வழக்கில், பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய கட்சியைச் சேர்ந்த ஆதாரவாளர்கள் பேரணி நடத்தியது அரசியல் வாழ்வில் இருப்போரை வெட்கப்பட வைத்தது.
பில்கிஸ் பானு பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு
பிரதமர் மோடி நேற்று செங்கோட்டையில் பெண்கள் பாதுகாப்பு, சக்தி, அதிகாரம், மரியாதை குறித்து பேசினார். அடுத்த சிலமணிநேரங்களில் பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என்று அவர்கள் அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம், அவர்கள் வெளியேறும்போது மரியாதை செய்யப்பட்டுள்ளது. இதுதான் அம்ரித் மகோத்சவா.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் நம்பக்கூடியதா, அவரே அவர் வார்த்தையை நம்பவில்லையா என்று தேசத்துக்கு கூற வேண்டும். உண்மையான நரேந்திரமோடி யார். டெல்லி செங்கோட்டையில் பொய்களுக்கு சேவை செய்பவரா அல்லது, குஜராத் அரசு பாலியல் குற்றவாளிகளை விடுவித்ததமைக்கு பின்னணியில் இருப்பவரா.
காங்கிரஸ் கட்சியும், இந்த தேசமும் இதை அறிந்து கொள்ள வேண்டும். பில்கிஸ் பானு வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
இவ்வாறு பவன் கேரா தெரிவித்தார்.