Asianet News TamilAsianet News Tamil

பிகினியில் ஓடி வந்து பஸ்ஸில் ஏறிய பெண்ணால் பயணிகள் அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

பேருந்தில் கதவுக்கு அருகில் நின்றிருந்த அவரை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டார். அந்த வீடியோ வைரலகாப் பரவி வருகிறது.

Bikini clad woman rides crowded Delhi bus, viral video leaves people with mixed reactions sgb
Author
First Published Apr 18, 2024, 11:31 PM IST

அண்மையில் டெல்லி மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் உள்ளாடைகளுடன் பயணித்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து ஒரு பேருந்தில் பிகினி உடை அணிந்த இளம்பெண் பயணித்தது சக பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பேருந்தில் கதவுக்கு அருகில் நின்றிருந்த அவரை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டார். அந்த வீடியோ வைரலகாப் பரவி வருகிறது. அந்தப் பெண்ணுக்கு அருகில் இருக்கும் மற்றொரு பெண் பிகினி பெண்ணின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து விலகிச் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து அந்தப் பெண்ணின் முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒருவரும் பிகினி பெண்ணைப் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு நகர்ந்து வெளியேறுகிறார்.

ரூ.9,000 கோடி முதலீடு! தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்! நாட்டிலேயே முதல் முறை!

இந்தப் பதிவு பகிரப்பட்டதில் இருந்து 5.3 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மக்களிடம் இருந்து பலவிதமான கருத்துக்களைப் பெற்று வருகிறது. பேருந்தில் பிகினி அணிந்து வந்த பெண்ணை சிலர் விமர்சித்தாலும், சிலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

'பொதுவெளியில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமா...' எனவும் 'சோஷியல் மீடியா வைரலாக வேண்டும் என்பதற்காக இப்படி செய்ய வேண்டுமா? இது முட்டாள் தனம்' என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 'என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம்' என்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர்.

நெட்டிசன்கள் இந்த வீடியோவில் டெல்லி காவல்துறையை டேக் செய்திருக்கிறார்கள். இந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல மற்றொரு சம்பவமும் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்தது. சமீபத்தில், நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

ப்ராஜெக்ட் நிம்பஸ்... இஸ்ரேலுக்கு எதிராகக் குரல் கொடுத்த கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios