Bihar Train Accident : பீகாரில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. 5 பேர் பலி.. பலர் காயம்..!

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்று கொண்டிருந்த வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Bihar Train Accident...5 dead, more than 70 injured tvk

பீகாரில் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்று கொண்டிருந்த வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே 3 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல பயணிகள் காயமடைந்தனர். 

இதையும் படிங்க;- முக்கிய கனிம சுரங்கங்கள் தோண்ட உரிமை தொகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Bihar Train Accident...5 dead, more than 70 injured tvk

இந்த விபத்தை அடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  இதுவரை காயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகள் மூலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க;- Cauvery Issue: காவிரியில் தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு திறக்க பரிந்துரை

 Bihar Train Accident...5 dead, more than 70 injured tvk
 
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அறிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios