பீகார் மாநிலம் பாகல்பூரில் பயணிகள் ரயில் ஒன்றில் ஜன்னல் வழியாக கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

பீகார் மாநிலம் பாகல்பூரில் பயணிகள் ரயில் ஒன்றில் ஜன்னல் வழியாக கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திய சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் ஜமால்பூர்-சாஹிப்கஞ்ச் பயணிகள் ரயிலில் லைலாக் மற்றும் கோகா நிலையங்களுக்கு இடையில் ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு பயணியிடமிருந்து மொபைல் ஃபோனைப் பறிக்க முயன்றபோது பயணிகளால் பிடிபட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: 63 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு!!

அவரோடு வந்த கொள்ளையர்கள் குழு தப்பி சென்றதை அடுத்து ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்த பயணிகள் நீண்ட தூரம் அவரை ஜன்னலில் தொங்கியபடி பயணிக்கவைத்தனர். வேகமாக வந்த ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த குற்றம்சாட்டப்பட்டவர் பயணிகளிடம் கைகளை விட வேண்டாம் என்று கெஞ்சினார். இதனை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். பின்னர் அந்த குற்றவாளியை பயணிகள் உள்ளே இழுத்து வந்து அடித்தனர்.

இதையும் படிங்க: உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா... WIPO அறிக்கையில் சூப்பர் தகவல்!!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் செப்டம்பர் 14 அன்று பதிவாகியுள்ளது. அதில் மொபைல் போன் பறிப்பவர் ரயிலில் தொங்கிக்கொண்டு மன்னிப்பு கேட்டார். ஜூன் மாதம், பீகாரில் உள்ள கதிஹார் ரயில் நிலையம் அருகே, மற்றொரு வழிப்பறி முயற்சியில், பெண் காவலர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.