Asianet News TamilAsianet News Tamil

63 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு!!

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 63 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. 

central govt orders to block 63 porn websites
Author
First Published Sep 29, 2022, 10:08 PM IST

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. இன்டர்நெட் சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 63 ஆபாச இணையதளங்களை புனே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 40வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா... WIPO அறிக்கையில் சூப்பர் தகவல்!!

மேலும், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணையதளங்களை முடக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப (வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன்படி, விதி 3(2)(b) மற்றும் உத்தரகண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவும், மேலும் குறிப்பிடப்பட்ட அந்த இணையதளங்களில் ஆபாசமான தகவல்கள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை செப்டம்பர் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: கர்பா நடனம் வேடிக்கை பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்!!

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட ஐடி விதிகள் 2021ன்படி,  ஐடி நிறுவனங்கள் ஹோஸ்ட் செய்த, சேமித்த அல்லது ஆபாசமாக வெளியிடப்பட்டவற்றை அகற்று வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இது மார்பிங் செய்யப்பட்டதாக இருந்தாலும் இந்த சட்டத்திற்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios