பீகார் முதற்கட்ட தேர்தலில் 64.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2 தேர்தல்களை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு அதிகாலையிலேயே திரண்டு வந்த மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டனர்.

பீகார் முதற்கட்ட தேர்தலில் 64.46% சதவீத வாக்குகள் பதிவு

பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு இடங்களில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மற்ற இடங்களில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்தது. இந்த நிலையில், பீகார் முதற்க்கட்ட தேர்தலில் 64.46% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தலில் பீகாரில் இவ்வளவு வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது இதுவே முதன்முறையாகும்.

எந்த மாவட்டத்தில் வாக்குப்பதிவு அதிகம்?

18 மாவட்டங்களில், பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கோபால்கஞ்சில் 64.96 சதவீதமும், முசாபர்பூரில் 64.63 சதவீதமும் பதிவாகியுள்ளன. பாட்னா மாவட்டத்தில் வாக்குப்பதிவு வேகம் எடுத்து 55.02 சதவீதமாக உள்ளது.

போஜ்பூர், ஷேக்புரா

லக்கிசராய் மாவட்டத்தில் 62.76 சதவீதமும், அதைத் தொடர்ந்து மாதேபுராவில் 65.74 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் போஜ்பூர் மாவட்டத்தில் 53.24 சதவீதமும், பக்ஸரில் 55.10 சதவீதமும், தர்பங்காவில் 58.38 சதவீதமும், ககாரியாவில் 60.65 சதவீதமுமாக உள்ளன.

முங்கேரில் 54.90 சதவீதமும், நாலந்தாவில் 57.58 சதவீதமும், சஹர்சாவில் 62.65 சதவீதமும், சமஸ்திபூரில் 66.65 சதவீதமும், சரணில் 60.90 சதவீதமும், ஷேக்புராவில் 52.36 சதவீதமும், சிவானில் 57.41 சதவீதமும், வைஷாலியில் 59.45 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எப்போது?

மேலும் ராகோபூரில் 64.01 சதவீதமும், மஹுவாவில் 54.88 சதவீதமும், அலினகரில் 58.05 சதவீதமும், தாராபூரில் 58.33 சதவீதமும், லக்கிசராய் 60.51 சதவீதமும், சாப்ராவில் 56.32 சதவீதமும், பாங்கிபூரில் குறைந்தபட்சமாக 40 சதவீதமும், புல்வாரியில் 62.14 சதவீதமும், ரகுநாத்பூரில் 51.18 சதவீதமும், சிவானில் 57.38 சதவீதமும், மொகாமாவில் 62.16 சதவீதமும் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகாரில் மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.