பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த 16 நாட்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. முதலில் 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வரை 43 குழந்தைகள் உயிரிழந்தனர். நோய் பாதிப்பால் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 

அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. 

இதுவரை கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 84 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 14 பேர் குழந்தைகளும். வைஷாலி மருத்துவமனையில் 10 குழந்தைகள், 2 பேர் மோதிஹரியிலும் ஒரு குழந்தை பெகுசாராயிலும் பலியாகியுள்ளனர். இதனால், குழந்தைகளின் பலி எண்ணிக்கை 111 ஐ உயர்ந்துள்ளது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்தால் 47 உயிரிழந்துள்ளதால் மேலும் பொதுமக்களிடையே பீதியையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பீகாரின் முசாபர்பூர் கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.