காதலித்துவிட்டு ஏமாற்றிய இளம் மாடல் அழகியை வீட்டிலேயே கடத்தி வைத்து, கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர், மும்பையில் சினிமா வாய்ப்பு தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்றார். அவர் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது, ரோகித் என்ற நபர் அறிமுகமாகி, நடிகைக்கு பல உதவிகளை செய்தார். ஒரு சில விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு ரோகித் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து, காதலை வளர்த்த நிலையில், நடிகைக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் வந்ததால், ரோகித்தை அவர் கைக்கழுவினார். தன்னுடம் நடிக்கும் வேறு சில நடிகர்களுடன் சுற்றித் திரிந்த நடிகை, ரோகித்தை தொடர்ந்து புறக்கணித்தார். இதனால், மனவேதனை அடைந்த ரோகித், நடிகைக்கு உரிய நேரத்தில் பாடம் கற்பிக்க வேண்டும் என காத்திருந்தார். 

இந்த நிலையில், சுமார் 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊரான போபாலுக்கு புறப்பட்டு வந்தார் நடிகை. அவரை பின் தொடர்ந்து வந்த ரோகித்தும், நடிகையை சந்தித்து, கெஞ்சி கதறியுள்ளார். ஆனால், நடிகையோ ரோகித் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் ரோகித்தை விடுவித்தனர்.வெளியில் வந்த ரோகித் மீண்டும் நடிகையை அணுகி தனது காதலை வலியுறுத்தியபோதும், அதை நடிகை உதாசீனப்படுத்தினார். செல்போன் மூல தொடர்பு கொண்டபோதும், அவர் ரோகித்திடம் பேசாமல் புறக்கணித்தார். இதனால், ஆத்திரமடைந்து நடிகையின் வீட்டுக்குச் சென்ற ரோகித், கத்தியை காட்டி மிரட்டி நடிகையை சிறைப்பிடித்தார். மேலும், அவரது பெற்றோரை மற்றொரு அறையில் வைத்து பூட்டிய அவர், நடிகையின் கண்முன்னே, தனது உடலிலேயே பல இடங்களில் கத்தியால் கீறிக் கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ரோகித்தை சமாதானப்படுத்தி, நடிகையை மீட்க முயற்சித்தனர். ஆனால், ஏற்கெனவே காவல்துறையினர் தன்னை கடுமையாக தாக்கியதால், கோபத்தில் இருந்த ரோகித், அவர்களை மிரட்டியதுடன், உள்ளே நுழைய முயன்றால், நடிகையை கொன்றுவிடுவேன் என மிரட்டினார். இதனால், செய்வதறியாது தவித்த காவல்துறையினர், ஒருவழியாக ரோகித்தின் மனதை மாற்றி, நடிகையை விடுவித்ததுடன், ரோகித்தையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.