நாடு முழுவதும் 70 ஆவது  குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்றையே மெய் சிலிர்க்க வைத்த பெண் அதிகாரி! ஆண்கள்களின் கம்பீர அணிவகுப்புக்கு முன்.. 

நாடு முழுவதும் 70 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பெருமைகளை பறை சாற்றும் நிகழ்வுடன் டெல்லி செங்கோட்டையில் கம்பவீரமாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்த நிகழ்வில், கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது. 144 ஆண்கள் அடங்கிய படையினரின் கம்பீர அணிவகுப்பிற்கு முன் தலைமை ஏற்று சென்றவர் இந்திய ஆர்மியின் பெண் அதிகாரி பாவனா கஸ்தூரி என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. இவர் ஒருவரால் ஒட்டு மொத்த பெண்களுமே பெருமை அடைந்துள்ளனர்.

பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், நாட்டின் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டையே காப்பாற்றும் இந்திய ஆர்மியில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் அத்தனை ஆண்களின் கம்பீர அணிவகுப்பு என்பது..சாதாரண விஷயம் அல்ல..பெண்கள் நாட்டின் கண்கள்..! 


Scroll to load tweet…