Asianet News TamilAsianet News Tamil

நாடு முழுவதும் வேலைநிறுத்தம்….. விவசாயிகளுக்கு ஆதரவாக கொட்டு மழையிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம்….

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் கடைகள் அடைப்பு. கர்நாடாகவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது.

Bharath bandh start political parties farmers association
Author
Chennai, First Published Sep 27, 2021, 10:26 AM IST

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் கடைகள் அடைப்பு. கர்நாடாகவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்ட போராட்டம் நடத்தியும் மத்திய அரசு இறங்கிவராத நிலையில் இன்று நாடு தழுவிய பாரத் பந்த்-க்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள், பல்வெறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து காலையில் திட்டமிட்டபடி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

Bharath bandh start political parties farmers association

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் விவசாய அணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிய்னர் ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. கேரளாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு உள்ளது. அங்கு அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.

Bharath bandh start political parties farmers association

கர்நாடாகாவில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டாக விவசாயிகள் முகாமிட்டுள்ள டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios