Asianet News TamilAsianet News Tamil

Rahul Gandhi:வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது: ராகுல் காந்தி விளாசல்

வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ், தாக்குதலில்இருந்து, சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளைக் காப்பாற்றவே பாரத் ஜோடோ நடைபயணம் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்

Bharat Jodo Yatra : Instigators of violence can never understand that pain: Rahul Gandhi
Author
First Published Jan 30, 2023, 3:28 PM IST

வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ், தாக்குதலில்இருந்து, சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற நெறிமுறைகளைக் காப்பாற்றவே பாரத் ஜோடோ நடைபயணம் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய  பாரத் ஜோடோ யாத்ரா காஷ்மீரில் 136 நாட்களுக்குப்பின் இன்று முடிந்தது.  இதுவரை 12 மாநிலங்கள், 12 பொதுக்கூட்டங்கள், 100 சாலை ஓரக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர் சந்திப்புகள், 275 நடைபயண பேச்சுகள், 115 ஆலோசனைக் கூட்டங்களை  நடத்தியுள்ளார். 

சந்திரசேகர் முதல் ராகுல் காந்தி வரை! அரசியல் தலைவர்களின் வரலாற்று நடைபயணங்கள்: ஓர் பார்வை

ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் யாத்திரையை நிறைவு செய்து ராகுல் காந்தி பேசியதாவது: 

Bharat Jodo Yatra : Instigators of violence can never understand that pain: Rahul Gandhi

இந்த நடைபயணத்தில் எனக்காகவோ அல்லது காங்கிரஸ் கட்சியாக்காவோ எதுவுமே செய்யவில்லை. ஆனால், மக்களுக்கும் ஏதும் செய்யவில்லை. எங்களின் குறிக்கோள், நாட்டின் அஸ்திவாரத்தை அழிக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதுதான். வன்முறையைத் தூண்டிவிட்டு நாட்டின் சுதந்திரமான, மதர்சார்பின்மை நெறிமுறைகளை அழிக்கும் நோக்கில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் ஈடுபட்டனர்.

என் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதை தொலைப்பேசி வாயிலாகத் தெரிந்து கொண்டேன். வன்முறையைத் தூண்டிவிடுபவர்களால் உறவின் இழப்பின் வலியை புரிந்துகொள்ள முடியாது.

வன்முறையைத் தூண்டுவிடும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவற்றால் உறவுகளின் இழப்பின் வலியைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு ராணுவ வீரரின் குடும்பம் புரிந்து கொள்ளும், சிஆர்பிஎப் வீரரின் குடும்பம் புரிந்ந்து கொள்ளும், புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரரின் குடும்பம் உணரமுடியும். காஷ்மீர் மக்களால் அந்த தொலைப்பேசி அழைப்பு வந்தால் உணர முடியும்.

இந்த நடைபயணத்தின் நோக்கம், அன்புக்குரியவர்களின் இழப்பை தொலைப்பேசி வாயிலாக தெரிந்து கொள்வதை முடிவுக்கு கொண்டுவரத்தான்.அது ராணுவ வீரராகவோ, சிஆர்பிஎவ் வீரராகவோ, அல்லது காஷ்மீர் மக்களாகவோ இருக்கலாம். 

பாரத் ஜோடோ யாத்ரா நிறைவு!கொட்டும் பனிமழையிலும் காஷ்மீரில் காங்கிரஸ் பேரணி

பாஜகவில் உள்ள எந்த ஒரு தலைவரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாரும் நடைபயணம் செய்ய முடியாது என சவால்விடுகிறேன். அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், அச்சப்படுவார்கள். ஜம்மு காஷ்மீரில் நான் நடந்தபோது, என் மீது தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

அதை நிராகரித்தேன், நான் என் சொந்த மண்ணில், என் மக்களுடன் நடக்க முடிவு செய்தேன். என் வெள்ளைச் சட்டையின் நிறத்தை மாற்றுவதற்கு எதிரிகளுக்கு நான் ஏன் ஒரு வாய்ப்பு வழங்கிடக்கூடாது. என்னைக் கொன்று என் சட்டையை சிவப்பாக்கட்டும். காஷ்மீர் மக்கள் என் கைகளில் கையெறி குண்டுகளை வழங்கமாட்டார்கள், மனது நிறைய அன்பைத்தாந் வழங்குவார்கள்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios