கடுமையான தலைவலியின் காரணமாக 15 தலைவலி நிவாரண மாத்திரைகளை ஒன்றாக உட்கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆனேக்கல்லை சேர்ந்தவர் முனிசப்பா. இவருக்கு மனைவி அனுஷியாம்மா, ஷோபா என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர் தலைவலியால் அவதிப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அவ்வப்போது, மருந்து மாத்திரை எடுத்து கொள்வார். மாத்திரை சாப்பிட்டால், தலைவலி குறைந்துவிடும். பின்னர் மீண்டும் தலைவலி ஏற்படும் போது மாத்திரை எடுத்து கொள்வார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வளவு மாத்திரை எடுத்து கொண்டாலும், தலைவலி குறைந்ததாக தெரியவில்லை. இதனால் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, அளவுக்கு அதிகமாக மாத்திரை எடுத்து கொண்டார். நேற்று முன்தினம் 15 மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்துள்ளார். இதில் சுயநினைவு இழந்து மயக்க நிலைக்கு சென்ற அவர், வீட்டில் சுருண்டு விழுந்து கிடந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனுஷியாம்மா மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அனுஷியா கண்விழிக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அனுஷியா உயிரிழந்தார். தலைவலியை போக்க எடுத்த விபரீத முடிவால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.